ஒட்டுமொத்த திரையுலகையும் மோசமாக விமர்சித்த நடிகை அமலா பால், அப்படி என்ன நடந்தது தெரியுமா?
அமலா பால்
நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர்.
அவர் குறித்து தொடர்ந்து சர்ச்சையான பல செய்திகள் வெளியாகின. சமீபத்தில் கூட அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பரவிய செய்தி பெரியளவில் பேசபட்டது.
இந்நிலையில் அமலா பால் அளித்துள்ள சமீபத்திய பேட்டியொன்றில் அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது இல்லை என்பது குறித்து பதிலளித்து இருக்கிறார்.

“தெலுங்கு திரையுலகிற்கு சென்ற போது அங்கு குடும்பங்களின் கான்செப்ட் இருப்பதை உணர்ந்தேன். அந்த திரையுலகமே அந்த குடும்பங்கள் மற்றும் அதன் ரசிகர்களால் தான் ஆதிக்கம் செலுத்தப்பட்டு இருக்கிறது.
அந்த நேரத்தில் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்கள் மிகவும் வித்தியசமாக இருந்தன. எப்போதும் இரண்டு கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாமே கவர்ச்சியாக் இருந்தது. அவை மிகவும் கமர்சியல் படங்களாக இருந்தன, அந்த திரையுலகில் என்னை இணைத்து கொள்ள முடியவில்லை.
அதனால் தான் அங்கு மிகவும் குறைவான படங்களிலே நடித்தேன்” என பேசியிருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு முதல் விமர்சனம் இதோ