அமலா பால் பிக் பாஸ் வர தயார்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்
நடிகை அமலா பால் பெயர் சமீப கலாமாக பல சர்ச்சைகளில் அடிபடுகிறது. சமீபத்தில் அவர் முன்னாள் காதலர் பவிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை கொண்டு மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார்.
பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்தேன்
அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அமலா பாலுக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என சொல்லி ஆதாரங்ளை சமர்ப்பித்து அவர் ஜாமீன் பெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில் அமலா பால் அளித்த பேட்டியில் தான் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் அதற்காக வருத்தப்படவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வர ஒரு கண்டிஷன்
மேலும் அமலா பால் பிக் பாஸ் செல்வீர்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்து இருக்கிறார்.
"நான் போக மாட்டேன். அவர்கள் இமயமலையில் அல்லது காட்டில் இந்த ஷோவை நடத்தினால் நான் செல்ல தயார். அங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
"எந்த ரூல்ஸ், எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது. நான் என்ன செய்கிறேனோ அதை அவர்கள் ரெக்கார்ட் செய்து கொள்ளட்டும்" என தெரிவித்து இருக்கிறார் அமலா பால்.
பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா