பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்! அவர் சொன்ன காரணத்தை பாருங்க
PS 1 படவாய்ப்பை நிராகரித்தது ஏன் என அமலா பால் கூறி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன PS 1 ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததாக அமலா பால் கூறி இருக்கிறார்.
நிராகரித்த அமலா பால்
பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அமலா பாலை அணுகி இருக்கிறார் மணிரத்னம். ஆனால் அவர் முடியாது என மறுத்துவிட்டாராம். அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அமலா பால்.
"நான் மணி சாரின் பெரிய ரசிகை. அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருக்கிறேன், ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்."
"ஆனால் அதில் நடிக்க mental stateல் நான் இல்லை, அதனால் முடியாது என சொல்லவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் 'இல்லை' என்று தான் சொல்வேன்" என அமலா பால் கூறி இருக்கிறார்.
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு இந்த பிரபலங்கள் உதவுகிறார்களா?- அவரது மனைவி உருக்கம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
