மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு இந்த பிரபலங்கள் உதவுகிறார்களா?- அவரது மனைவி உருக்கம்
வடிவேல் பாலாஜி
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவே தன்னை அற்பணித்த ஒரு கலைஞன். எல்லோரையும் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது, ஆனால் அவர் வந்தாலே கண்டிப்பாக அனைவரும் சிரித்து விடுவார்கள்.
அந்த அளவிற்கு காமெடி கலக்கிய இவர் வடிவேல் அவர்களின் குரலில் அப்படியே பேசியதால் வடிவேல் பாலாஜி என்ற பெயரும் பெற்றார்.
ஏராளமான காமெடி நிகழ்ச்சிகள் செய்து பலரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி இப்போது நம்முடன் இல்லை.
2020ம் வருடம் செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
உதவும் பிரபலங்கள்
வடிவேல் பாலாஜி இறந்தபோது பலரும் அவரது குடும்பத்திற்கு உதவுவதாக அறிவித்தார்கள். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குழந்தைகளை படிப்பு செலவு ஏற்று இப்போதும் அதனை தொடர்ந்து செய்கிறாராம்.
ஈரோடு மகேஷ் அரிசி, பருப்பு என மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்கிறாராம். சமீபத்தில் புகழ் வடிவேல் பாலாஜி வீட்டிற்கு சென்று தனது திருமணத்திற்காக அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு புதிய டிரஸ் வாங்கி கொடுத்துவிட்டு வந்தாராம்.
வடிவேல் பாலாஜியின் மனைவி இந்த விஷயங்களை கூறி கொஞ்சம் மகிழ்ந்துள்ளார்.
விஜய் டிவியின் ஹிட் சீரியலை பார்த்துள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி- என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
