8 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
தீபாவளிக்கு வெளிவந்து வசூலில் வேட்டையாடி வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தை ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கமல் ஹாசன் தயாரித்திருந்தார்.

மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனையை அமரன் படம் படைத்தது.
வசூல்
இந்த நிலையில், 8 நாட்களை கடந்துள்ள சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 189 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 200 கோடியை கடந்துடும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ரூ. 200 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக அமரன் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan