கமலின் வசூல் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
அமரன்
உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த அமரன், உலகளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 30 நாட்களை கடந்து நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 325 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
விக்ரம் வசூலை முறியடித்த அமரன்
இந்த நிலையில், வெளிநாட்டில் மட்டுமே ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளதாம் அமரன் படம். இதன்மூலம் கமலின் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை அமரன் படம் முறியடித்துள்ளது.
விக்ரம் திரைப்படம் வெளிநாட்டில் ரூ. 101 கோடி வசூல் செய்திருந்த நிலையில், அமரன் ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
