விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த அக்கா, தங்கை நடிகைகள்!.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் நடித்த படங்களில் சாதி மற்றும் அரசியல் கருத்துக்களை குறித்து பேசி வெகுவாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் சில நடிகைகள் இவருடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தனர்.தற்போது அந்த நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
80, 90 களில் முன்னணி ரஜினி, கமல் என பல நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் அம்பிகா. இவர் ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். இதன் பின்னர் 1986 -ம் ஆண்டு வெளியான தழுவாத கைகள் என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர்.
அப்போதைய காலகட்டத்தில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்தது என்றால் அவருடைய தங்கை ராதா தான். இவர் பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவரும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தார்,பின்னர் அம்மன் கோவில், உழவன் மகன் போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர்.
KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இதோ அழகிய ஜோடியின் போட்டோ