படுதோல்வியடைந்த லால் சிங் சத்தா.. அமீர் செய்த மாபெரும் விஷயம்
லால் சிங் சத்தா
பாலிவுட் நடிகர் அமீர் நடித்து கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லால் சிங் சத்தா. இப்படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியிருந்தார்.
கரீனா கபூர் இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படுதோல்வியடைந்தது.

பாக்ஸ் ஆபிசில் பல கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள இப்படம் அமீர் கான் கேரியரில் டிசாஸ்டராக அமைந்துள்ளது.
அமீர் செய்த விஷயம்
இந்நிலையில், இப்படத்தால் மாபெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் விதமாக நடிகர் அமீர் கான் தனது சம்பளத்தை திருப்பி கொடுத்துள்ளாராம்.

இப்படத்திற்காக நடிகர் அமீர் கானுக்கு ரூ. 50 கோடி சம்பளமாக பேசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri