பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை நான்.. நெகிழ்ச்சியில் அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்
பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன். தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை சினிமாவில் தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழில் இவர் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். 82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் சந்திய திரைப்பட விழாவில் அபிஷேக் பச்சன் 'ஐ வாண்ட் டு டாக்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி
இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனைப் பாராட்டி ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், " பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை நான். ஒரு தந்தைக்கு இதை விட பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. அபிஷேக், நம் குடும்பத்தின் பெருமை மற்றும் மரியாதை" என்று பதிவிட்டுள்ளார்.
T 5472 - THE HAPPIEST FATHER ON EARTH ..
— Amitabh Bachchan (@SrBachchan) August 15, 2025
BEST ACTOR ABHISHEK .. so so soso proud love !!! pic.twitter.com/RhdgcwXYf0