அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் சோகமான நிலை.. கடைசி காலத்தில் இப்படியா?
அம்மன் படம்
சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்கள் பலர் இப்போது இல்லை, ஆனால் பலர் சினிமாவில் இப்போது ஆக்டீவாக உள்ளனர்.
வில்லன் நடிகராக ஒரேஒரு படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் நின்ற ஒரு நடிகரின் இறுதி காலத்தை பற்றிய செய்தி தான் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வில்லன் நடிகர்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாமி படம் என்று கூறியதும் நமக்கு உடனே நியாபகம் வருவது அம்மன் படம். இதில் ஒரேஒரு வசனம் தான் ஜண்டா என கூறி மக்களை மிரட்டியவர் தான் ராமி ரெட்டி.
தெலுங்கில் பிரபலமான நடிகரான இவர் தமிழில் விஜய்யுடன் நெஞ்சினிலே, ராமராஜன் உடன் நாடு அதை நாடு, துள்ளி திரிந்த காலம் போன்ற படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ராமி ரெட்டி கல்லீரல் பிரச்சனையால் மிகவும் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் காணப்பட்டார். கடைசியில் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் 52 வயதில் உயிரிழந்தார்.