லெஜண்ட் சரவணன் இப்படிப்பட்டவரா! சுற்றி எப்போதும் 10 பவுன்சர்கள் இருப்பார்களா
லெஜண்ட்
தி லெஜண்ட் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார் லெஜண்ட் சரவணன். பிரபல தொழிலதிபரான அவர் அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பின் ஹீரோவாக இந்த படம் நடித்தார்.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கும் விஜய் டிவி காமெடியன் லெஜன்ட் படத்தில் நடித்தது பற்றி பேசி இருக்கிறார்.

லெஜண்ட் இப்படிப்பட்டவரா
"அந்த படத்தின் 2 காட்சிகளில் மட்டுமே நடித்தேன். லெஜெண்டை சுற்றி எப்போதும் 10 பவுன்சர்கள் இருப்பார்கள். அதனால் பார்ப்பது மிக கடினம். ஷூட்டிங்கில் விவேக் சார் தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். காமெடியோடு நடனமும் ஆடுவேன் என விவேக் அவரிடம் சொல்ல, நடனம் கற்றுக்கொண்டீர்களா என லெஜண்ட் கேட்டார்."
"அவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால் எப்போதும் டயட் இருப்பார். எடையையும் அதிகம் குறைத்திருக்கிறார். இந்த வயதிலும் அதிகம் உழைப்பார்."
"ஏசியில் இருப்பவர் ஷூட்டிங்கிற்காக வெயிலில் வந்து நீண்ட நேரம் நிற்பார். இரவு 11 மணிக்கு தான் தூங்குவார், 4 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவார். அப்படிப்பட்டவர் அவர்" என அமுதவாணன் தெரிவித்து இருக்கிறார்.

முதல் நாளே பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்! அதிர்ந்து போன போட்டியாளர்கள்
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri