அனன்யா பாண்டே செய்த விஷயம்.. லைகர் தோல்வி பற்றி கவலையே இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகை அனன்யா பாண்டே தற்போது விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறார்.
லைகர் தோல்வி
ஹிந்தி நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் ரிலீஸ் ஆன லைகர் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். படத்தின் ரிலீஸுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்துகொண்டார்.
ஆனால் படம் ரிலீஸ் ஆகி மிக மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. நெகடிவ் விமர்சனம் காரணமாக படம் படுதோல்வியாகி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா தனது சம்பளம் 6 கோடி ரூபாயை தயாரிப்பாளார்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார் என செய்தி சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி அவரது அடுத்த படமும் கைவிடப்படுவதாக தெரிகிறது.
Vacationல் அனன்யா பாண்டே
இந்நிலையில் அனன்யா பாண்டே தற்போது கூலாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
லைகர் படம் தோல்வி அடைந்ததற்கு சுத்தமாக வருத்தம் கூட இல்லை போல என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.