விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறேனா.. முதல்முறையாக வாய்திறந்த ராஷ்மிகா
ராஷ்மிகா முதல் முறையாக 'விஜய் தேவரகொண்டா உடன் காதலா' என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிக்கிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இதுவரை பேசியது இல்லை.
இருப்பினும் அவர்கள் பற்றிய கிசுகிசு தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பதில் சொன்ன ராஷ்மிகா
இந்நிலையில் தற்போது முதல் முறையாக ராஷ்மிகா இது பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
"எங்களை பற்றி நீங்கள் என்ன வேண்டுமானலும் பேசுங்க. ஏனென்றால் நாங்கள் public figures. எங்களது பர்சனல் லைப் பற்றி யாரும் பேச கூடாது என எதிர்பார்க்க முடியாது. அதனால் நீங்கள் இதை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள், ஆனால் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள்.
"நான் உறுதியாக அறிவிக்காத வரை, அது உண்மை இல்லை" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
யானை படத்தின் மொத்த வசூல்! வெற்றியா தோல்வியா.. ரிசல்ட் இதோ