இன்னும் ரெண்டு டாட்டூ குத்திக்கோங்க.. எலிமினேட் ஆன அனன்யாவுக்கு கமல் சொன்ன பதில்
பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் தான் ஆகிறது. இரண்டு வீடுகள் இருக்கும், அதில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே டாஸ்கில் பங்கேற்க முடியும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வெறும் சமையல் வேலை, கிளீனிங் வேலை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த அனன்யா எஸ் ராவ் முதல் ஆளாக ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.
டாட்டூ போட்டதால் தானா..
எலிமினேட் ஆன பின் கமலிடம் மேடையில் அனன்யா பேசினார். நான் இன்னும் அதிக நாட்கள் இருப்பேன் என நினைத்தேன். நான் செய்யவேண்டியதை செய்தேன். நான் டாட்டூ போட்டதால் தான் எலிமினேட் செய்துவிட்டார்கள் போல என பேசினார் அவர்.
அது காரணமில்லை, வேண்டுமென்றால் இப்போது போய் இன்னும் ரெண்டு டாட்டூ போட்டுகோங்க என கமல் அவருக்கு பதில் கூறி அனுப்பி வைத்தார்.
You May Like This Video

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
