கணவர் பற்றி பேசினால் செருப்பால அடிப்பேன்.. கோபத்தில் கொந்தளித்த புஷ்பா பட நடிகை
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் திரைத்துறையில் பிரபலமானவர் அனசுயா பரத்வாஜ். இவர் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் காதலர் தினம் அன்று அவர் கணவருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செருப்பால அடிப்பேன்
இந்த புகைப்படத்திற்கு சிலர் மோசமான கமன்டை பதிவிட்டு வந்தனர். அதில் ஒருவர், "அனசுயா காசுக்காக தான் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு கோபம் அடைந்த அனசுயா, "காசை தாண்டி நீ முதலில் சிந்திக்க கற்றுக்கொள். ஏன் என் கணவரிடம் மட்டும் தான் காசு இருக்கிறது என்னிடம் எந்த பணமும் இல்லையா..உன்னை நான் செருப்பால அடிப்பேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "உண்னுடைய எண்ணம் பணத்தில் மட்டும் தான் இருக்கிறது. உன்னை போன்று அனைவரும் இருக்க மாட்டார்கள். முதலில் உன்னுடைய குணத்தை மாற்று" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த கமன்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரமின் வீடு, கார்.. மொத்த சொத்து மதிப்பு விவரம்