விஜய் வாயில் சிகரெட்.. கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை கிளப்பிய அரசியல்வாதி
நடிகர் விஜய் படம் வருகிறது என்றால் சர்ச்சைகளும் அழையா விருந்தாளியாக வந்துவிடும். அவரது முந்தைய படங்களை பலவும் சர்ச்சைகளை தாண்டி தான் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கின்றன.
தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதல் பாடல் வெளியீடு பற்றிய போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் விஜய் வாயில் சிகரெட் வைத்து இருக்கிறார். இதை பாமக-வின் அன்புமணி ராமதாஸ் எதிர்த்து இருக்கிறார்.
இதற்கு முன் சர்க்கார் பட போஸ்டருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது டெலீட் செய்யப்பட்டது. தற்போது லியோ பட போஸ்ட்டரை அவர் விமர்சித்து இருக்கிறார்.
அன்புமணி எதிர்ப்பு
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ட்விட் செய்து இருக்கிறார்.
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 16, 2023
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர்…
பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்தாரா?

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
