Star Sportsல் இருந்து லிலகிவிட்டாரா பாவனா- விஜய் டிவி பக்கம் வந்த ரகசியம் என்ன, தொகுப்பாளினி பதிவு
தொகுப்பாளினி பாவனா
ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய பாவனா அதன்பிறகு சென்றது விஜய் டிவி.
அங்கு சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவருக்கு மிகவும் பிரபலம் கிடைத்த நிகழ்ச்சி என்றால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் 6வது சீசன் தான்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்ச செம ஹிட், பின் கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.
பின் திருமணம் செய்த பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
விஜய் நிகழ்ச்சி
6 ஆண்டுகளாக விஜய் டிவி பக்கம் வராத பாவனா தற்போது மீண்டும் இந்த தொலைக்காட்சி பக்கம் வந்துள்ளார். சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில், 6 வருஷம் ஆனது, உங்கள் கடிகாரத்தை ரீவைண்டு செய்ய வேண்டிய நேரம் இது, இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பாருங்கள். அதில் 3 எபிசோடுக்கு மட்டும் கெஸ்ட் ஹோஸ்ட் ஆக நான் மீண்டும் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
என்னை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வந்த சூப்பர் சிங்கர் குழுவுக்கு நன்றி, இந்த மேடை நிரந்தரம் அல்ல தற்காலிகமானது தான். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடங்கி உள்ள கபடி தான் என்னுடைய முக்கியமான வேலை என பதிவு செய்துள்ளார்.