முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய தொகுப்பாளினி டிடி- என்ன கூறியுள்ளார் பாருங்க
தொகுப்பாளினி டிடி
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி. இவர் ஷோ என்றாலே மிகவும் கலகலப்பாக பார்க்கவே ஆர்வமாக இருக்கும்.
அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தாண்டி தனது பேச்சாலே அனைவரையும் கவர்ந்துவிடுவார்.
சிறுவயதிலேயே சின்னத்திரைக்குள் வந்த இவர் நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் என்ற படத்தில் நடித்தார்.
திருமணம், விவாகரத்து
தொகுப்பாளினி டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் செய்துவிட்டனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து டிடி பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது.
திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் ஆனால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது.
திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என பேசியுள்ளார்.
இலங்கை பெண்ணுக்காக தியாகம் செய்த ஊர் மக்கள்- சரிகமப நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
