இலங்கை பெண்ணுக்காக தியாகம் செய்த ஊர் மக்கள்- சரிகமப நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்
சரிகமப நிகழ்ச்சி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி இந்த இரண்டு பாடல் நிகழ்ச்சிகளுமே மிகவும் பிரபலம்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று பலரும் போட்டிபோட்டு கலந்துகொள்கிறார்கள். தற்போது சூப்பர் சிங்கர், சரிகமப இரண்டிலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நெகிழ்ச்சி சம்பவம்
ஜீ தமிழின் சரிகமப நிகழ்ச்சியின் பாதியில் அசானி என்ற பெண் கலந்துகொண்டிருக்கிறார். ஏன் இவ்வளவு தாமதமாக வந்துள்ளார் என்பது பற்றிய விவரம் இதோ.
தோட்டத்தில் வேலை பார்க்கும் கனகராஜ், சத்திய பவானி ஆகியோரின் மகள் தான் அசானி, 9வது படிக்கிறார். தோட்டத்தில் வேலை பார்க்கையில் 200 வருமானம் கிடைக்குமாம்.
அசானி ரேடியோவில் பாடல்களை கேட்டே பாட தொடங்கியிருக்கிறார், அவரது பாடலை ரெகார்ட் செய்து ஊர் மக்கள் ஜீ தமிழ் சரிகமப குழுவிற்கும் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அசானியால் ஆடிஷனில் கலந்துகொள்ள முடியவில்லையாம், காரணம் பணம் இல்லை. அசானி இலங்கையிலிருந்து சென்னைக்கு வருவதற்கு அவர்களுடைய இலங்கை பண மதிப்பில் 1.5 லட்சம் ரூபாய் ஆகுமாம்.
எனவே ஊர் மக்கள் கையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து அசானி மற்றும் அவரது அப்பாவை அனுப்பி வைத்துள்ளனர். அசானி மெகா ஆடிஷனில் பங்கேற்காத நிலையிலும் அவருக்காக நடுவர்கள் சிறப்பு வாய்ப்பு கொடுத்து இருந்தனர்.
குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ்

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
