விஜய் டிவியை விட்டு வெளியேறுகிறாரா தொகுப்பாளினி டிடி.. ரசிகர்கள் ஷாக்
தொகுப்பாளினி டிடி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக இருந்த நிகழ்ச்சிகள் ஜோடி மற்றும் காஃபி வித் டிடி. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இன்று வரை யாராலும் மறக்கமுடியாத அளவிற்கு மனதில் இடம்பிடித்துள்ளது.
தொகுப்பாளினி டிடி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று கொண்டுள்ளார். இதில், காணொளியில் தொண்டற்றிய திவ்யதர்ஷினி நிகழ்ச்சியின் இயக்குனர் ஒருவர், விஜய் டிவியை விட்டு வெளியே செல்ல வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேள்வி கேட்டார்.
விஜய் டிவியை விட்டு வெளியேறுகிறாரா
அதற்க்கு பதிலளித்த திவ்யதர்ஷினி 'அது அப்படியே அமைந்துவிட்டது. ஆனால், தற்போது பல விஷயங்கள் மாறிவிட்டன. என்னுடைய உடல்நலம் காரணமாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியவில்லை.
சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்குகிறேன். ஆனால், எனக்கும் புதிய நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்று ஆசை இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் அதை செய்யலாம் என்று நினைக்கிறன் ' என்று கூறியுள்ளார்.
இதன்முலம் விஜய் டிவியில் இருந்து வெளியேற டிடிக்கு விருப்பம் இருக்கிறது தெரியவந்துள்ளது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
