திருமணத்திற்கு பிறகு மணிமேகலை இவ்வளவு கஷ்டத்தை எதிர்க்கொண்டாரா?- எமோஷ்னல் ஆன பிரபலம்
தொகுப்பாளினி மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தமிழ் மக்களின் கவனத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிவிட்டார்.
அடுத்து விஜய் டிவி பக்கம் வந்தார், இவர் கலந்துகொள்ளாத நிகழ்ச்சியே இல்லை என்றளவிற்கு இப்போது ஆகிவிட்டது.
எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும் அதில் மாகாபா போல இவரும் உள்ளார்.

பேட்டியில் எமோஷ்னல்
அண்மையில் மணிமேகலை தனது சினிமா பயணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசும்போது, நாங்கள் மாதத்திற்கு ரூ. 7 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பாதிப்பதாக ஒரு மீம் பார்த்தேன்.
ஆனால் திருமணமான முதல் இரண்டரை ஆண்டுகள் அவ்வளவு கஷ்டப்பட்டோம். BMW கார் வாங்கிய போது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் இரண்டு மாதம் Due கட்டவில்லை என்பதால் காரை எடுத்து போவதாக கூறினார்கள்.
அதெல்லாம் யாருக்குமே தெரியாது என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே கட்டியுள்ள பெரிய வீடு