மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே கட்டியுள்ள பெரிய வீடு
நடிகை ஸ்ரீதேவி
1969ம் ஆண்டு துணைவன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர் அப்படத்தில் கடவுள் முருகன் கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
தமிழில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய ஸ்ரீதேவி தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார்.
கடைசியாக இவர் நடித்த மாம் திரைப்படம் அவரின் 300வது படமாக அமைந்துவிட்டது. இவர் வாங்காத விருதுகளே கிடையாது, கொண்டாடாத ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
சொந்த வீடு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பக்கத்தில் உள்ள மீனம்பட்டி என்கிற கிராமத்தில் தான் நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டில் இப்போது நடிகை ஸ்ரீதேவியின் பெரியப்பா அவர்கள் வசித்து வருகிறார்களாம்.
இதோ அவரது சொந்த வீடு,
சிம்புவுடன் முதன்முறையாக புகைப்படம் எடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- வைரலாகும் போட்டோ