தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?- லைவ் வீடியோவில் புலம்பிய பிரபலம்
பிரியங்கா தேஷ்பாண்டே
தமிழ் சின்னத்திரை நாம் கொண்டாடும் பல தொகுப்பாளினிகள் உள்ளனர், அதில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
ஆரம்பத்தில் மக்களுக்கு தெரியாத முகமாக இருந்தவர் இப்போது இவரை தெரியாத மக்களே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளார். தொடர்ந்து விஜய் டிவியில் டாப் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குகிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
பல நாயகிகளை போல தொகுப்பாளினி பிரியங்காவும் சொந்தமாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார்.
அன்றாடம் நிறைய வீடியோக்களை வெளியிட அதற்கு லைக்ஸ் மற்றும் பார்வையாளர்கள் குவிந்து வருகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் ஜுனியர் இறுதி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், விஜய் டிவிக்காக நான் அதிகமாகவே உழைக்கிறேன் ஆனால் சம்பளம்தான் உயர்த்தி தர மாட்டேன் என்கிறார்கள் என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.