சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்
சிம்பு-தனுஷ்
ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ்.
ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான் உள்ளார்கள். சிம்பு உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே மாறி அடுத்தடுத்து பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.
சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அடுத்து இந்த படம் தான் ரிலீஸ். இன்னொரு பக்கம் நடிகர் தனுஷ் இட்லி கடை பட வேலைகளில் செம பிஸியாக உள்ளார்.
தொகுப்பாளினி
தமிழ் சினிமாவின் தொகுப்பாளினிகள் என சொன்னதுமே முதலில் மக்களுக்கு நியாபகம் வருவது டிடி தான்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், படங்களில் நடிகர்களுக்கு தோழியாக, தங்கையாக நடிக்க விருப்பமில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஆசை உள்ளது என டிடி கூற யாருடன் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்க ஆசை என கூறியுள்ளார். நடிப்பில் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது கூறியுள்ளார்.