ஸ்கிரீன் முன்பு முள்வேலி போட்ட தியேட்டர்! இந்த நடிகரின் ரசிகர்களை பார்த்து பயமாம்
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் குறைந்துகொண்டிருக்கிறது என சினிமா துறையினரே பலரும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து வரும் பெரிய படங்கள்
முன்னணி ஹீரோ படங்கள் வெளியானால் தான் ரசிகர்கள் மீண்டும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் விஜய்யின் மாஸ்டர். தெலுங்கில் ஆர்ஆர்ஆர், கன்னடத்தில் கேஜிஎப் என தென்னிந்திய சினிமாவில் அடுத்த சில வாரங்கள் படுபிஸியாக இருக்க போகிறது.
ரசிகர்களும் இந்த படங்களை தியேட்டரில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
கம்பி வேலி போட்ட தியேட்டர்
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்று ஸ்கிரீன் முன்பு முள்கம்பி வேலி அமைத்து இருக்கின்றனர். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடித்து இருப்பதால் தியேட்டரில் ரசிகர்களை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்பதால் தான் இப்படி செய்ததாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
முள் வேலி அமைக்கப்பட்டு இருக்கும் தியேட்டர் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் மற்றொரு தியேட்டரில் ஆணி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது.
RRR movie preparations in theatres! ? pic.twitter.com/ddTfJJzI7k
— Madan Gowri (@madan3) March 23, 2022
வலிமை ஓடிடி ரிலீஸுக்கு தடை கேட்டு வழக்கு! கோர்ட் அதிரடி தீர்ப்பு