இயக்குநரை நம்பி நடித்தேன் ஆனால் ரொமான்டிக் காட்சிகள்.. ஆண்ட்ரியாவின் அதிர்ச்சி பேட்டி!
ஆண்ட்ரியா
பின்னணி பாடாகி, நடிகை என திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்தெடுத்து நடிக்கும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவர், அவள், வடசென்னை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இவர் நடிப்பில் விரைவில் 'பிசாசு-2' படம் வெளியாக உள்ளது. இது 'பிசாசு' படத்தின் தொடர்ச்சி என்பதால், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

அதிர்ச்சி பேட்டி!
இந்நிலையில், ஆண்ட்ரியா 'பிசாசு-2' படம் குறித்து பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " பிசாசு-2' கதையில் துணிச்சலான காட்சிகள் இருப்பதாக இயக்குநர் மிஷ்கின் என்னிடம் கூறினார். ஆனால் படப்பிடிப்பின் போது அவற்றை நீக்கிவிட்டார். இப்படத்தில் ரொமான்டிக் காட்சிகள் அதிகம்.
மிஷ்கின் சார் மீதான நம்பிக்கையில் இந்தப் படத்தில் நடித்தேன். அவர் பல ஸ்டார் ஹீரோக்களுடன் படங்கள் செய்துள்ளார். விரைவில் ஒரு தயாரிப்பாளராக படத்தை வெளியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
