அடுத்தடுத்து பறிபோன வாய்ப்பு, அங்காடி தெரு நடிகர் மகேஷின் தற்போதைய பரிதாப நிலை- கடைசியில்
நடிகர் மகேஷ்
நடிகர் மகேஷ் அங்காடித் தெரு என்ற படத்தில் நடிப்பதற்கு பதிலாக அப்படத்தில் வாழ்ந்தார் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு மிகவும் எதார்த்தமாக திருநெல்வேலி சுற்று வட்டார மக்களின் எதார்த்தத்தை தன்னுடைய நடிப்பால் கண்முன்னே கொண்டுவந்து அசத்தியிருப்பார்.
இந்த படத்திற்கு பிறகு அஞ்சலியின் மார்க்கெட் உயர தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார்.
ஆனால் நடிகர் மகேஷின் நிலைமை அப்படி இல்லை, அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.
சமீபத்திய பேட்டி
அண்மையில் நடிகர் மகேஷ் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், ஈட்டி, சுந்தரபாண்டியனில் விஜய் சேதுபதி கதாபாத்திரம், மாயாண்டி குடும்பத்தார் என பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் மிஸ் செய்தேன்.
அங்காடித்தெரு படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை அதனாலேயே என்னுடைய கேரியர் வீணாகப் போய்விட்டது என்று எமோஷ்னலாக பேசியுள்ளார்.
ஆரம்பத்திலேயே அஜித்தின் விடாமுயற்சிக்கு ஏற்பட்ட சிக்கல்- படப்பிடிப்பிற்கே இப்படியா?