நானும் மனுஷி தானே, எனக்கு அது பிடிக்கும் நான் செய்கிறேன்- அனிகா ஓபன் டாக்
அனிகா சுரேந்தர்
தமிழில் நடிகர் அஜித்தின் மகளாகவே ரசிகர்கள் பார்க்கும் ஒருவர் நடிகை அனிகா சுரேந்தர்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். மேலும் PT சார் என்ற படத்திலும் நடித்து வருகிறார் அனிகா.
அனிகா பேட்டி
நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்கள் மூலம் மக்களிடம் பேசப்படும் நடிகை அனிகா நிறைய கிளாமரான உடைகள் அணிகிறார் என்ற பேச்சு உள்ளது.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், சினிமாவில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கிறார்கள். கவர்ச்சியாக உடை அணிவது என்னுடைய தனிப்பட்ட விஷயம், ஸ்டைலாக இருக்க பிடிக்கும்.
என்ன உடை அணிந்தாலும் விமர்சனம் செய்கிறார்கள், தவறாக பேசுகிறார்கள், நானும் ஒரு மனுஷிதான் என பேசியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
