அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய நடிகை அனிகா சுரேந்தர்- லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷுட்
நடிகை அனிகா சுரேந்தர், பேரை கேட்டாலே சும்மா அதிருதுல என்று தான் கூற வேண்டும். படங்கள் நடிக்கவில்லை என்றாலும் போட்டோ ஷுட்கள் மூலம் எல்லோரையும் அசத்தி வருகிறார்.
அனிகாவின் திரைப்பயணம்
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிகா. 9 படங்களுக்கு மலையாளத்தில் தொடர்ந்து நடித்துவந்த இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு பெரிய ரீச் கிடைத்தது, அதன்பிறகு நானும் ரவுடித்தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன் போன்ற படங்கள் நடித்திருக்கிறார்.
போட்டோ ஷுட்கள்
அனிகா மொத்தமாக ஒரு 20 படங்கள் நடித்திருப்பார், ஆனால் அவர் நடத்திய போட்டோ ஷுட்களுக்கு கணக்கே இல்லை என்று தான் கூற வேண்டும். அதிலும் கொரோனா நேரத்தில் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
அண்மையில் அவர் புடவையில் ஒரு போட்டோ ஷுட் எடுக்க அச்சு அசல் நயன்தாரா போலவே அவர் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
