11 நாட்களில் அனிமல் படம் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அனிமல்
ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல். இப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படுமோசமான விமர்சனங்கள் அனிமல் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறது.
வசூல்
இந்நிலையில், அனிமல் திரைப்படம் வெளிவந்து 11 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 737 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் செய்யப்போகும் சாதனைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu