அனிருத்தை பார்த்து கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என கேட்ட நபர்- அவர் கொடுத்த செம பதில்
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தான் இப்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 310 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, இன்னமும் படத்திற்கு டிக்கெட் புக்கிங் எல்லாம் அமோகமாக நடக்கிறது.
இப்பட வெற்றிபெற்ற சந்தோஷத்தில் கமல்ஹாசன் செம குஷியில் உள்ளார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த வண்ணம் இருக்கிறார், சமீபத்தில் கூட தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பட வெற்றிக்கு வாழ்த்து பெற்றார்.
கமல் கொடுத்த பரிசு
படம் மக்களிடம் நல்ல ரீச் பெற ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்குனர் லோகேஷ் மற்றும் 13 உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசளித்தார், அதோடு படத்தில் சின்ன வேடத்தில் நடித்த சூர்யாவிற்கும் தனது சொந்த வாட்சை பரிசளித்தார் கமல்.

இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அனிருத்தை பார்த்து உங்களுக்கு கமல் என்ன பரிசு கொடுத்தார் என கேட்டுள்ளனர். அதற்கு அனிருத் உடனே விக்ரம் படம் கொடுத்தார் என செம கெத்தாக பதில் அளித்துள்ளார்.
மதுரையில் உள்ள காமெடி நடிகர் வடிவேலுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க