அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன்
Anirudh Kavya Maran Marriage Invitation: அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், CM விஜய் மற்றும் MK ஸ்டாலினுக்கு கலாநிதி மாறன் பத்திரிகை வழங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
அனிருத் - காவ்யா
இசையமைப்பாளராக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகளும், SRK அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை கரம்பிடிக்க போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து குட்டி பத்மினி மற்றும் YG மகேந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துரையாடியபோது, அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என தெரிவித்தனர். இதன்பின்தான் இவர்களுடைய திருமணம் உண்மை என தகவல் பரவியது.
திருமண பத்திரிகை
ஜெயிலர் 2 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், தனது மகளின் திருமண வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் கலாநிதி மாறன். நேற்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து திருமண பத்திரிகையை கலாநிதி மாறன் வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் - ஸ்டாலின்
இந்த நிலையில், தமிழ்நாட்டின் இந்நாள் முதல்வர் விஜய்க்கும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கும் கலாநிதி மாறன் நேரில் சென்று திருமண பத்திரிகையை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நடக்கவிருக்கிறது. அதன்பின், நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரம்மாண்ட ஹோட்டலில் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதில் CM விஜய், ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri