ரஜினியின் புதிய படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?- பிளானை மாற்றி தயாரிப்பு நிறுவனம்
அனிருத்
இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் 3 என்ற படம் மூலம் அறிமுகமானவர் அனிருத். இப்படத்தை தொடர்ந்து அனிருத் கமிட்டான பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான்.
இந்த வருடத்தில் மட்டும் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் போன்ற பட பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் அனைத்து பாடல்களுக்குமே நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்துள்ளார்கள்.

புதிய படம்
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தில் இரண்டு படங்கள் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வந்துவிட்டது. இந்த இரண்டு படங்களுக்குமே அனிருத்தை கமிட் செய்ய தயாரிப்பு குழு முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் அனிருத் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் என 2 படத்திற்கு ரூ. 10 கோடி கேட்டிருப்பதாகவும் இதனால் லைகா நிறுவனம் ஒரு படத்திற்கு ஏ.ஆர். ரகுமானை கமிட் செய்ய முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வருகின்றன.

பிக்பாஸ் பிரபலம் ADKவின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்பம்