பிக்பாஸ் பிரபலம் ADKவின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்பம்
பிக்பாஸ் ADK
2012ம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற இசை ஆல்பம் மூலம் பிரபலம் ஆனவர் தினேஷ் கனகரத்தினம். விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ஆத்திச்சூடி என்ற பாடல் மூலம் தனது முதல் சினிமா பாடலை பாடியிருந்தார்.
அதன்பிறகு, டி.இமான், ஏ.ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணன், ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் ஆர்யன் தினேஷ் கலக்கியுள்ளார். தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
இப்போது பிக்பாஸிலும் சூப்பராக விளையாடிக் கொண்டு வருகிறார்.
முன்னாள் மனைவி
தினேஷ் கனகரத்தினம் ஜேஸ்மின் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் தினேஷ் சில காரணங்களால் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தற்போது தினேஷ் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ,
அஜித்தின் 63வது படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனரா?- எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்