அரசன் படத்திற்காக அனிருத் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
அரசன்
விடுதலை 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அரசன். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து படு வைரலானது.

இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோவில் அனிருத் இசை செம மாஸாக இருந்தது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதேபோல், முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் இணையும் படமும் இதுவே ஆகும். இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
அனிருத் சம்பளம்
இந்த நிலையில், அரசன் படத்திற்காக இவருக்கு சம்பளம் தரவில்லையாம். அதற்கு பதிலாக அரசன் படத்தின் ஆடியோ உரிமையை கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோ உரிமை தற்போது ரூ. 13 கோடி வரை மதிப்பு என்றும் படம் வெளிவரும்போது இது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.