உண்மையை சொல்லியே தீருவேன் என கிளம்பிய மீனாவிற்கு ரோஹினி வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு பெரிய விஷயத்தை மறைக்க அதனால் பல கேடித்தனம் செய்துகொண்டிருந்த ரோஹினி எப்போது சிக்குவார் என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது.
இப்போது மக்கள் காத்திருந்த அந்த விஷயம் நடந்துவிட்டது, ரோஹினி சிக்கிவிட்டார், ஆனால் மீனாவிடம் சிக்கிவிட்டார் என்ற வருத்தம் உள்ளது. ரோஹினி தனது அப்பாவிற்கு திதி கொடுத்திருக்கும் போது மீனா எல்லாவற்றையும் பார்த்து ஷாக் ஆகிறார்.

இத்தனை நாள் எல்லோரையும் ஏமாற்றியதற்காக ரோஹினியை கோபத்தில் பளார் விடுகிறார். வீட்டில் அனைவரிடமும் இந்த விஷயத்தை சொல்லியே தீருவேன் என கோபத்தில் மீனா கிளம்புகிறார்.
ரோஹினி செக்
அப்போது பிரச்சனையில் இருந்து தப்பிக்க ரோஹினி உடனே ஒரு முடிவு எடுக்கிறார். அதாவது இந்த உண்மையை வீட்டில் கூறினால் எனது வாழ்க்கையே போய்விடும், நான் உயிருடன் இருந்து என்ன பிரயோஜனம்.

நீங்கள் வீட்டில் இந்த விஷயத்தை கூறினால் நானும் எனது மகனும் இங்கேயே எங்களது உயிரை விட்டிருவோம் என செக் வைக்கிறார். இதனால் மீனா வீட்டில் எதுவும் கூற மாட்டேன் என கூறிவிடுகிறார்.