கமல், சிம்பு படத்தை நிராகரித்த டாப் இசையமைப்பாளர்.. நெருங்கிய நண்பருக்கே இப்படியொரு நிலைமையா
எஸ்.டி.ஆர் 48
சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் எஸ்.டி.ஆர் 48. இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
வரலாற்று கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். தேசிங் பெரியசாமி இயக்கம், சிம்பு நடிப்பு, கமல் தயாரிப்பு என மட்டுமே அறிவித்துள்ளனர்.
ஆனால், கதாநாயகி யார், இப்படத்திற்கு இசையமைக்க போவது யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
நிராகரித்த அனிருத்
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் இடம் கேட்டுள்ளார்களாம். அடுத்த 6 மாதத்திற்கு நான் பிசி என அனிருத் கூறி எஸ்.டி.ஆர் 48 படத்தை நிராகரித்து விட்டாராம்.
இதனால் வேறொரு இசையமைப்பாளரை கமிட் செய்ய முடிவு செய்துள்ளனர். அனிருத்தின் நெருங்கிய நண்பர் சிம்புவிற்கே இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
