தகாத வார்த்தையில் திட்டிய அனிதா சம்பத்! வைரலாகும் பிக் பாஸ் அல்டிமேட் வீடியோ
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஹாட்ஸ்டாரில் லைவ்வாக ஒளிபரப்பாவதால் எடிட்டிங்கில் பார்க்க முடியாத விஷயங்கள் அனைத்தையுமே தற்போது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
சண்டை
போட்டியாளர்கள் நடுவில் சண்டை வருவதும் தினமும் நடக்கும் விஷயம் ஆகிவிட்டது. தொடர்நது சண்டை வருவதால் வனிதா ரகளை செய்து ஷோவில் இருந்து வெளியேறிவிட்டார். தனது மெண்டல் ஹெல்த் பாதிக்கப்படுகிறது என அவர் புகார் கூறி இருந்தார்.
வனிதா வெளியில் வந்த பிறகும் மற்ற போட்டியாளர்கள் நடுவில் அவ்வப்போது பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
கெட்ட வார்த்தையில் திட்டிய அனிதா சம்பத்
அனிதா சம்பத் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் தற்போது வீட்டில் தகாத வார்த்தையில் பேசி நிரூப்பை திட்டி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனிதா சம்பத் இப்படியெல்லாம் பேசுவாரா என அனைவரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
#BBUltimate #BBUltimateTamil #Anithasampath #Niroop ஏமிரா இதி ??? pic.twitter.com/px1ChK9qV4
— jaya lakshmi (@coronagaaji) March 12, 2022