சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்- எந்த தொடர் தெரியுமா?
அனிதா சம்பத்
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல லட்சம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அனிதா சம்பத்.
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனிதா சம்பத், அதன்பிறகு சூர்யாவின் காப்பான், ரஜினியின் தர்பார் போன்று சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.
செய்தி வாசிப்பாளர் மூலம் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிய இவர் பிக்பாஸ் பிறகு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.
புதிய தொடர்
பிக்பாஸ் பிறகு தந்தையின் மரணம், யூடியூப்பில் அதிகம் வீடியோ போடுவது, புதிய வீடு, மலேசியா சென்றது என பிஸியாக இருந்த அனிதா சம்பத் இப்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மந்திர புன்னகை என்ற தொடரில் நாயகியின் தோழியாக என்ட்ரீ கொடுத்துள்ளாராம்.
ரஜினி, ஷாருக்கான் படங்களில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம்- யார் தெரியுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
