சென்னையை பார்த்தால் பயமாக இருக்கிறது.. அனிதா சம்பத் ஆதங்கம்!!
ஆம்ஸ்ட்ராங்
குஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு அருகில் 6 பேர் கொண்ட கும்பலால் அவரை சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.
ஆதங்கம்
இந்நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் கல்லூரி படிக்கும் போது பெரம்பூரில் தான் இருந்தேன். ஆனால் இப்போது சென்னையை பார்க்க பயமாக இருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் தலைவரை அநியாயமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
மனசுக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது. அவரை வெட்டி கொன்றது அவர் தானா? இல்லை வேற யாருமா? என்பதை நினைத்தாலே பயமா இருக்கிறது. ஒரு திட்டமிடல் இல்லாமலா செய்திருப்பார்கள், அப்படி செய்திருந்தால் சரணடைந்தவர்கள் உண்மையாகவே கொலை செய்தவர்களா என்று பல கேள்விகள் ஓடுகின்றன.
ஒரு பொது இடத்தில ஒருவரை 6 பேர் சேர்ந்து வெட்டிக் கொல்லப்படுகிறார். அரசியல் பிரமுகர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி அச்சமில்லாமல் இருக்க முடியும் என்று அனிதா சம்பத் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.