39 வது பிறந்தநாள்.. அஞ்சலி யாரை கட்டி அணைத்து கொண்டாடி உள்ளார் பாருங்க
அஞ்சலி
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.
அதை தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் வெளிவந்தது. இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஞ்சலி மற்றும் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

போட்டோ
இந்நிலையில், நடிகை அஞ்சலி நேற்று அவரது 39 வது பிறந்தநாளை செல்ல நாய் குட்டியுடன் கொண்டாடியுள்ளார்.
அதில், தனது நாய் குட்டியை கட்டி பிடித்துக் கொண்டு அவர் கொண்டாடும் போட்டோவை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri