நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

By Karthick Raja May 02, 2026 05:15 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

மனோஜ் மற்றும் விஜயா வீட்டை அடமானம் வைத்து பைனான்சியரிடம் கடன் வாங்கிய விஷயம் தெரிந்து அண்ணாமலை கடும் கோபமடைந்தார்.

நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Annamalai Cries For His House In Siragadikka Aasai

ரூ. 48 லட்சம் கடனை உடனடியாக திருப்பி கொடுக்கவில்லை என்றால் வீட்டை ஏலத்திற்கு விட்டுவிடுவேன் என பைனான்சியர் கூற, அந்த கடனை இன்னும் மூன்று மாதத்திற்குள் திருப்பி தருகிறோம் என முத்துவும் மீனாவும் கூறினார்கள்.

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம்

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம்

அதன்படியே, ரூ. 48 லட்சம் கடனில் இதுவரை ரூ. 10 லட்சத்தை தந்துவிட்டனர். மீதமுள்ள கடனை அடைக்க இருவரும் இரவும் பகலுமாக உழைத்து கொண்டிருக்கும் நேரத்தில், அதிர்ச்சியளிக்கும் புரோமோ இன்றைய எபிசோடில் வெளியாகியுள்ளது.

கண்கலங்கிய அண்ணாமலை

இதில், 'முத்து வக்கீல் என்ன சொன்னாங்க' என அண்ணாமலை கேட்க, '10 நாட்கள் நீதிமன்றம் விடுமுறையாம், மிகவும் அவசரமான கேஸ் மட்டுமே விசாரிக்கப்படும், அதனால் இப்போதைக்கு நீதிமன்ற தடை உத்தரவு (Court Stay Order) வாங்க முடியாது' என முத்து கூறுகிறார்.

நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Annamalai Cries For His House In Siragadikka Aasai

இதை கேட்டவுடன் அப்படியே இடிந்து போய் விடுகிறார் அண்ணாமலை. 'அப்போ வீடு கையை விட்டு போய்விடுமா? இந்த வீடு இன்னொருத்தன் கைக்கு போயிருமா, அப்போ இந்த வீட்டை விட்டு நாம் போகவேண்டுமா, அதற்கு நான் செத்துப்போகலாம்' என கூறி கண்கலங்கி அழுகிறார்.

நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Annamalai Cries For His House In Siragadikka Aasai

கடனை கட்ட முத்துவும் மீனாவும் மூன்று மாதங்கள் டைம் கேட்டிருந்த நிலையில், திடீரென என்ன ஆனது? இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து வரும் வாரம் பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US