அண்ணாத்த படத்தின் உண்மையான வசூலை வெளியிட்ட சன் டிவி ! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..
இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா !
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.
விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிவா இயக்கிய இப்படம் ரஜினி நடிப்பில் வெளியான நல்ல குடும்ப திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அண்ணாத்த திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுது, இதனால் இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை.
இதனிடையே தற்போது சன் டிவி நெட்ஒர்க் தரப்பில் அண்ணாத்த திரைப்படத்தின் வசூல் குறித்த விவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி அண்ணாத்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியை வசூல் செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
இதனால் தற்போது ரசிகர்கள் பொய்யான வசூல் விவரங்களை ட்ராக்கர்ஸ் பரப்பி வருவதாக அவர்களை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிறந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபரின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே