சமீபத்தில் பிறந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபரின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு தொடர். இந்த தொடரில் அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடந்தது இல்லை.
இதுவரை செழியன் மற்றும் ராதிகா என இரண்டே கதாபாத்திர மாற்றங்கள் தான் நடந்தன. ராதிகா வேடத்தில் இப்போது ரேஷ்மா நடிக்கிறார், அவருக்கு முன்பாக ஜெனிபர் என்பவர் நடித்திருக்கிறார்.
அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலில் இருந்து வெளியேறினார்.
ஜெனிபர் இன்ஸ்டா
நடிகை ஜெனிபருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். அதன்பிறகும் தனது மகனின் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.
இந்த நிலையில் தான் அவரது கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் ஜெனிபர். அப்போது தனது இரண்டு மகன்கள், கணவர் என குடும்பமாக ஒரு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம், உங்களது இரண்டாவது மகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்