Ant-Man and the Wasp: Quantumania திரை விமர்சனம்
ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் மார்வல் படங்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த வரிசையில் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளிவந்த படம் தான் Ant-Man and the Wasp: Quantumania. இப்படம் எப்படியுள்ளது பார்ப்போம்.
படம் அவெஞ்சர் எண்ட் கேம் முடிந்து சில வருடங்களில் நடப்பது போல் காட்டியுள்ளனர். படத்தின் ஆரம்பத்திலேயே ஸ்காட்டின்(Ant man) மகள் குவாண்டம் உலகத்திற்கு எதோ சிக்னல் அனுப்புகிறாள்.
அப்போது தெரியாதனமாக அங்கிருந்த ஸ்காட் முழு குடும்பமும் அந்த குவாண்டம் உலகம் உள்ளே இழுக்கிறது.
உள்ளே சென்றால் நாம் மார்வல் உலகில் இருக்கிறமோ அல்லது MIB அல்லது ஸ்டார் வார்ஸ் உலகில் இருக்கிறமோ என்பது போல் எங்கு திரும்பினாலும் ஏலியன்ஸ் தான் நிரம்பியளது.
மார்வல் படம் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் நிறைய அனிமேஷன் காட்சிகள், சண்டை காட்சிகள் இருக்கும் என்பதால்.
ஆனால், இந்த படத்திலோ எதோ பேமிலி ட்ராமா போல் படம் முழுவதும் பேசிக்கொண்டே தான் உள்ளார்கள், சரி அவர்கள் பேசுவது எந்தளவிற்கு படத்திற்கு உதவுகிறது என்றால் அதுவும் ஒன்றுமில்லை.
படத்தில் சில ஏலியன்கள் நம்மை கவர்கிறது, குறிப்பாக ஜெல்லி போல் வரும் ஒரு ஏலியன் படத்தில் வரும் இடமெல்லாம் நகைச்சுவை காட்சிகளை அள்ளி தெளித்து, கிளைமேக்ஸில் வில்லன்களை உள்ளே இழுத்து செய்யும் கலாட்டா ரசிக்க வைக்கிறது.
படத்தில் இருக்கும் ஒரே பலம் வில்லன் கதாபாத்திரம் தான், ஒரு டைம் லைனையே மாற்ற நினைக்கும் அவனை ஜானட் தன் குடும்பத்துடன் எப்படி வீழ்த்தினார் என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.
படத்தின் சிஜி காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், படம் முழுவதும் வரும் குவாண்டம் உலகம் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது. ஒரே ஆறுதல் படத்தில் வரும் 2 போஸ்ட் கிரிடிட்ஸ் காட்சிகள் தான்.
மொத்தத்தில் குவாண்டம் உலகில் ஸ்காட் மாட்டி தப்பித்துவிட்டார், ஆனால், நாம் தியேட்டரில் மாட்டி எப்போது முடியும் தப்பிக்கலாம் என்று ஆகி விட்டது.
அடுத்தடுத்து வெளியாகவுள்ள இரண்டு Avengers திரைப்படங்கள் ! மார்வெல்-ன் அதிரடி அறிவிப்புகள்..