செந்தில் ரொம்ப நல்லவர், ஆனால் கவுண்டமணி!! வெளிப்படையாக பேசிய அனுஜா ரெட்டி
அனுஜா ரெட்டி
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஜா ரெட்டி. இவர் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
14 வயதிலேயே சினிமாத்துறையில் என்ட்ரி கொடுத்த அனுஜா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனுஜா ரெட்டி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் என்னுடைய சக நடிகர்கள், நடிப்பதில் நிறைய உதவி செய்து இருக்கிறார்கள். செந்தில் சார் ரொம்ப நல்லவர், ஹெட் வெயிட் இல்லாதவர். கவுண்டமணி கூட நல்லவர் தான்.
ஆனால் கவுண்டமணி ரொம்ப attitude காட்டுவர், செந்தில் சார் அப்படி இல்லை. கவுண்டமணி கிட்ட நிறைய திறமைகள் இருக்கிறது. ஸ்பாட் நிறைய விஷயங்களை செய்வார். அதனால் தான் அவர் அவ்ளோ பேசப்படுகிறார் என்று அனுஜா ரெட்டி கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
