'கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன்'.. காதல் தோல்வி சர்ச்சை!! மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்

By Karthick Raja Nov 02, 2026 05:00 AM GMT
Report

Anupama Parameswaran says she had tough times: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் "நான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன்" என மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறிய விஷயம் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்

அனுபமா பரமேஸ்வரன்

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், கொடி, தள்ளிப்போகாதே, சைரன், டிராகன், பைசன் மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

காதல் தோல்வி சர்ச்சை

நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலில் தோல்வியடைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் இருந்து கடினமான முயற்சிக்கு பின் மீண்டு வந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தன. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மனநிலை குறித்து நடிகை அனுபமா பேசியுள்ளார்.

மனம் திறந்த அனுபமா

அவர் கூறியதாவது: "நான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்; தற்போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை; எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்துகொண்டேன்; அதன் மூலம் என்னை விமர்சிப்பவர்களை தாண்டி, என் மீது உண்மையான அன்பு காட்டும் நல்லவர்கள் யார்யார் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அத்தகைய அன்பான மனிதர்களுக்காக நான் தொடர்ந்து பயணிப்பேன்" என மனம் திறந்து பேசினார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US