என் வாழ்க்கையில் நடந்த அந்த சோகமான விஷயம், அதன்பின்... அனுபமா எமோஷ்னல் பேச்சு
நடிகை அனுபமா
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார், படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
சோகமான சம்பவம்
அனுபமா, கிஷ்கிந்தாபுரி என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அனுபமா பேசும்போது, நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
அதனால் எலோரிடமும் அன்பாக இருக்க வேண்டும். கோபத்தை மனதிற்குள்ளேயே வைத்திருந்தால், கடைசியில் சோகம்தான் மிஞ்சும். எனக்கு ஒரு தோழி இருந்தார், ஒரு முறை எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
ஆனால் அவள் என்னிடம் பேச முயற்சி செய்தாள், நான் தான் பேச தயாராக இல்லை. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு, அவர் இறந்துவிட்டதை தெரிந்துகொண்டேன், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது என் வாழ்க்கையில மறக்க முடியாத வலி.
சில சமயங்களில், நாம் நேசிப்பவர்களுடனான சண்டைகள் அல்லது தவறான புரிதல்கள் நம்மை வாழ்நாள் முழுவதும் வருத்தத்தில் ஆழ்த்தும் என பேசியுள்ளார்.