சென்சேஷனல் இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்!! எகிறும் எதிர்பார்ப்பு
ஜிவி பிரகாஷ்
குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.
கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது பல படங்களில் நடித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
எகிறும் எதிர்பார்ப்பு
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜிவி பிரகாஷ் லீட் ரோலில் நடிக்க உள்ளாராம். இப்படம் பான் இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், "இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க போகிறேன். என்னுடைய சினிமா கேரியரில் இதுதான் பெரிய விஷயம் என்று கருதுகிறேன். இதற்கு முன்பு Gangs of Wasseypur என்ற ஹிந்தி படத்திற்கு இசையமைத்து இருக்கிறேன்" என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
