மீண்டும் ஜோடியாகும் அனுஷ்கா, பிரபாஸ்! இந்த முன்னணி இயக்குனரின் படம் தான்
அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்தபோது பெரிய அளவில் வரவேற்பை பெற்றனர்.
காதல் கிசுகிசு
பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவருக்கும் நடுவில் இருக்கும் கெமிஸ்ட்ரி பார்த்து அவர்கள் நிஜத்திலேயே காதலிக்கிறார்கள் என கிசுகிசு பரவ தொடங்கியது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தது.
ஆனால் அவர்கள் திருமணம் பற்றி வாய்திறக்கவே இல்லை. எங்களுக்கு நடுவில் எதுவும் இல்லை என பிரபாஸ் வெளிப்படையாகவே பேட்டி அளித்தார். ஆனாலும் கிசுகிசு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மீண்டும் ஜோடி
இந்நிலையில் தற்போது தெலுங்கில் இயக்குனர் மாருதியின் அடுத்த படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
ராஜா டீலக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த படம் பற்றி மாருதி முன்பே பேசி இருந்தார். ஆனால் சமீபத்தில் அப்டேட் இல்லாததனால் படம் கைவிடப்பட்டுவிட்டது என அனைவரும் நினைத்தனர். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல்களின்படி பிரபாஸ் அந்த படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
பிரபாஸ் தான் அனுஷ்காவை ஜோடியாக கொண்டுவருகிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இதனால் தான் ஒல்லி ஆனேன்: பிக் பாஸ் லாஸ்லியா சொன்ன ஷாக் விஷயம்